புது வசந்தம்
இலைகள் உதிர்ந்த
பச்சைமரங்கள் அவை
அத்தனையும் மொட்டையாய்க்
காட்சி தர ......................
இலையுதிர் காலம் .................
காதலியைத்த தேடி தேடி
ஒருத்தியும் கிடைக்காது போக
காதலில் தோல்வி என்று தீர்மானித்து நான்...
ஓர் இலையில்லா மொட்டை மரத்தடியில் ......
என் முதுகு மட்டும் அதன்மீது உரச
நானே நீதான் வழிகாட்டவேணும் என்று
வானை வெறிச்சோனு நோக்க ....ஏதோ
முதுகை உரச , திரும்பி பார்த்தேன்
அந்த மரம் மொட்டை அல்ல ....அதில்
இப்போது குருத்து விட்டிருந்தன இலைகள் !
அதைப்பார்த்து குதுகுலித்தது என்னுள்ளம்
புது நம்பிக்கை அப்படியே, அக்கணமே
என் மனதில் அரும்பியது ..............
இலையுதிர்க் காலம் போய் வசந்தம் .....
புது இலைகள் குருத்தாய் மரங்களில்
என்னுள்ளத்தில் எனக்கோர் காதலி
கிடைப்பாள் என்ற நம்பிக்கை .....
வா, வசந்தம் என் மனத்தைக் குளிர்த்திட
எனக்கோர் வசந்தி கிடைப்பாளா சொல்லு
என்றேன் நான்