வாய்மொழி போதும்
ஒன்று இரண்டு நான்கென
ஓய்ந்து விட்ட காலந்தனை
வசைபாடிய வரிசை இல்லை ...
பட்டாம் பூச்சியாய் படபடக்கவில்லை
பட்டமாய் மனமும் பறக்கவில்லை
ஆழமாய் சுவாசம் மட்டும்
என் கருவிழிக்குள் நீ நின்றதும்...
ஓர் நிற உடை தரித்து
ஊர்தனை பவனி வந்ததாய்
ஞாபகம் ஏதும் இல்லை...
கை கோர்த்த நாள் முதல்
சுட்ட மண் போலும் சுந்தரி ஒருத்தி
கைத்தீண்ட வருவாளென கண் அயர...
அயர்ந்த நொடி தனில்
சிறு துளியாய் பொட்டிட்டு
சிக்கனமாய் இதழ் விரித்து
கலைந்து விட்ட மை நிறம் தரித்து
கள்ளி நீ பக்கம் வந்ததும்...
அலறி அடித்து என் கை விரல்கள்
பத்தும் அவசரமாய் எந்தின
உன் அழகு பாதந்தனை
முட் பதிய போகும் உன் நடை நோக்கி...
சிரிக்கி நீயும் நினைவொன்று
என் அகத்திற் வருமுன்னே
உன் சிறுவாய் வழி வருவது கண்டு
ஏனோ உன் மேல் ஓர் கிறக்கம் தான்...
சொல்லிக் கொண்டு போக
பத்திரங்கள் மனதில் இன்னும்
பக்கம் பக்கமாய்...
நிர்கதியாய் நான் நின்ற போதும்
என் பாதி நீ இருப்பின்
செல்வம் என் வாசற் வேண்டாம்
நரை முடி கொண்ட போதும் உன்
மெல்லிய வாய்மொழி போதும்
உன்னோடு ஓடோடி வந்திடுவேன்...
ஒரு வேளை
என் அன்பிற்க்கினியவளே...
நான் உன்னை காதலிக்கிறேனோ....