padmavathy9 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  padmavathy9
இடம்
பிறந்த தேதி :  30-Dec-1978
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Feb-2016
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  9

என் படைப்புகள்
padmavathy9 செய்திகள்
padmavathy9 - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2024 12:30 pm

மூச்சடக்கவும் தெரியாமல்..
மூழ்கி போகவும் முடியாமல்..
கரைந்தும் விடாமல்..
கலங்கவும் முடியாமல்..
விரும்பியது நகர்த்தவும் விரும்பாமல்...
எட்டி தொடவும் முடியாமல்..
... என்னே ஒரு நடுத்தர வர்க்கம்...

மேலும்

padmavathy9 - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2024 12:26 pm

தந்தையின் விரல் பற்றினேன்
பயம் என்னை பற்றிய போது
அன்னையின் விரல் பற்றினேன்
அடுத்த அடி தடுமாறிய போது...
உன் ஒரு விரல் மட்டும் நீட்ட..
ஏதோ ஓர் பிணைப்பு
சொந்தமாய் நீ தெரியவில்லை...
பந்தமாய் உன்னை அறியவில்லை..
வருடங்கள் பல கடந்த போதும்
மனது மட்டும் பத்தை தாண்டவில்லை..
கலக்கமின்றி தயக்கமின்றி சலனமின்றி பாரதியின் கவிதையாய் கால்கள்...
பற்றி கொண்டது என் நண்பனின் விரல் அல்லவா...

மேலும்

padmavathy9 - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2023 2:57 pm

நடப்பது யாதென கேட்டேன்..
அனைத்தும் நலமே என்றான்..
என் நினைவுகள் சரியோ என்றேன்..
அனைத்தும் சுகமே என்றான்..
அறிவு திறம்படவில்லை என்றேன்..
அனுபவம் பெரிதாம் என்றான்..
தலையாட்டி பொம்மை யானென் என்றேன்..
எட்டைய புரத்தானின் ஏட்டை கொஞ்சம் நுகர்ந்து செல் என்றான்..
பயம் களைய வேண்டுவன கேட்டேன்..
வாழ்வு ஒரு முறையே நினைவில் கொள் என்றான்..
தயக்கம் தப்பிச்செல்ல வழி கேட்டேன்..
ஏட்டில் பொறியப்போவது உன் கவிதை என்றான்..
சகலமும் சொல்ல நீ யார் என்றேன்..
உன் சப்தநாடி தந்த அர்த்தநாரி என்றான்.

மேலும்

உன் சப்தநாடி தந்த அர்த்தநாரி என்றான். ---அருமை பாராட்டுக்கள் 12-Sep-2023 6:58 am
padmavathy9 - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2019 11:32 am

ஒன்று இரண்டு நான்கென
ஓய்ந்து விட்ட காலந்தனை
வசைபாடிய வரிசை இல்லை ...
பட்டாம் பூச்சியாய் படபடக்கவில்லை
பட்டமாய் மனமும் பறக்கவில்லை
ஆழமாய் சுவாசம் மட்டும்
என் கருவிழிக்குள் நீ நின்றதும்...
ஓர் நிற உடை தரித்து
ஊர்தனை பவனி வந்ததாய்
ஞாபகம் ஏதும் இல்லை...
கை கோர்த்த நாள் முதல்
சுட்ட மண் போலும் சுந்தரி ஒருத்தி
கைத்தீண்ட வருவாளென கண் அயர...
அயர்ந்த நொடி தனில்
சிறு துளியாய் பொட்டிட்டு
சிக்கனமாய் இதழ் விரித்து
கலைந்து விட்ட மை நிறம் தரித்து
கள்ளி நீ பக்கம் வந்ததும்...
அலறி அடித்து என் கை விரல்கள்
பத்தும் அவசரமாய் எந்தின
உன் அழகு பாதந்தனை
முட் பதிய போகும் உன் நடை நோக்கி...
சிரிக்கி

மேலும்

padmavathy9 - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2016 10:52 am

தேசத்து கவிஞர்களும் என்னை கோபித்தனர்
உன்னைப் போல் பேரழகியை காதலிப்பதால்
என்னவள் இமை பட்டாம்பூச்சிகள் கனவில்
எனக்குள் பறந்திட உனக்குள் தொலைகிறேன்.
***
பருவத்து ஆசைகளை புருவத்தில் பருக்களாக்கினேன்
தினந்தினம் கிள்ளிப்பார்ப்பாய் மெதுவாய் வலித்திட,
முத்துப்பற்கள் விலக புன்னகை செய்யும் செங்கமலம்
போன்ற உன்னிதழில் என் ஆயுளை ரேகையாக்குகிறேன்
***
குழந்தை பார்வையில் காமம் செத்து மடிந்தது
என் நெஞ்சுக்குள் நினைவை புதைத்து தாலாட்டு பாடுகிறேன்
ஆயிரம் தாரகைகள் மின்னிடும் உன் பார்வைகள்
இரவின் பரிதவிப்பாக கனவில் சேலை மாற்றுகிறது.
***
நயாகரா நீர்விழ்ச்சி அருகில் ஒரு குடிசை

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Mar-2016 11:36 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Mar-2016 11:36 pm
காதலின் பொருள் உணர்ந்த கவிதை - அருமை 24-Mar-2016 2:33 pm
காதலின் உணர்வுகளை கற்பனை தொட்டியில் போட்டு தாலாட்டும் கவிதை நண்பரே ... 24-Mar-2016 10:22 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே