தேன்மொழி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தேன்மொழி |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 17-May-1979 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 297 |
புள்ளி | : 19 |
கவிதைகள் பிடிக்கும்
கவிதை எழுத நினைத்தேன்
கருப்பொருள் இல்லை
கல்லூரி செல்லவில்லை
கல்வி முழுமை பெறவில்லை
உழைக்க தயங்கவில்லை
உடலுக்கு ஓய்வுமில்லை
வருமானம் போதவில்லை
வசதிகள் பெருகவில்லை
வாரிசு குறைவில்லை
கல்விக் கூடங்களில் இடமில்லை
கட்டுமானப் பணியாளராக பிள்ளை
ஒரு வீட்டில் திருடன் நுழைந்து விட்டான் சத்தம் கேட்டு வீட்டுக்காரன் விழித்த போது
வீட்டுக்காரன்:யாருடா அது?
திருடன்:மியாவ்
வீட்டுக்காரன்:யாருடா அது?
திருடன்:மியாவ் மியாவ் மியாவ்............/
வீட்டுக்காரன்:சமையல் கட்டு பக்கம் யாருடா அது?
திருடன்:டேய் செவுட்டு நாயே!!!பூனடா........
உள்ளம் முழுதும் துன்பம்
உணவுகள் கசக்கும்
அன்னையை நினைக்கும்
உண்மை சொல்ல துடிக்கும்
உறக்கம் இன்றி தவிக்கும்
பெற்றோரை பார்க்க ஏங்கும்
அனுமதி கேட்க தயங்கும்
கணவனின் முகத்தில்
தாயின் அன்பை தேடும் - அதில்
கணலை கண்டதும் வாடும்
பிள்ளை முகம் பார்க்கும் - அதில்
தன்னை மறந்து கிடக்கும்
தன்னிலை மாற்ற உழைக்கும்
மாறா நிலை கண்டு கலங்கும்
நரை விழுந்த நிலையிலும்
கணவனின் குறை சொல்ல தயங்கும் பெண்மை
மழை வரும் நேரம்
மனம் முழுதும் தாகம்
குளிர் துளியாய் நீயும்
சுகம் தருவாய் நாளும்
உன் வருகை என்றும்
உளமகிழ்ச்சி பெருகும்
வழி பார்த்து காத்திருக்கும்
விழி இரண்டும் பூத்திருக்கும்
மங்கையின் விழிகளில்
மன்னவன் கண் பட்டதும்
கதிரவன் ஒளியின்றி
குவிந்திருந்த வெந்தாமரை
சிவந்தது போலும்
நினைவுகள் ஏனோ வாட்டியது..,
நீ இல்லாத நிமிடங்களில்..!
கனவுகள் ஏனோ கலைந்தது..,
நீ தோன்றாத கனவானதால்..!
உயிரும் ஏனோ உருகியது..,
உன்னை மறக்க நினைக்கும்..,
'ஒவ்வொரு வினாடியும்'..!
நானும் ஏனோ சிந்தித்தேன்.,
நீ ஏன் இல்லை...
என்னோடு என்று..!
காலமும் சொன்னது 'பிரிவு' எனும் பதிலை..!
தன் கைப்பொம்மையை
தங்கையிடம் இழந்து
தன்னை தேற்ற வழியறியா
தவிக்கும் முதல் குழந்தையைப்போல
காதலை இழந்த
இதயம் துடிக்கும் கடைசிவரை.
கண்கள் சந்திக்கும்
சிறு துளி நேரம்
வாய் திறவா நிலை வரும்
மெய் மறந்து
உயிர் பேசும்
உன்னோடு நான்
கலந்தே இருப்பேன் என்று...
இறைவன்
படைத்து
இயல்பு
கெடாமல்
தொடரும்
பட்டியலில்
இன்றும்
இருக்கிறது...
குழந்தையின்
கள்ளம்
கபடமற்ற
சிரிப்பு !!!
இது மாவீரர்களுக்கு தரப்படும் மலர் செண்டு மங்கையின் இதழ்களை விட இனிமையானது
விடியற்காலை விறகடுப்பில்
சோறு சமைக்கும் அம்மா...
ஏர் கலப்பையை தோளில் சுமந்து
மாடுகளுடன் செல்லும் அப்பா...
நெற்கதிர்களை சுமந்து நிற்கும்
வயலுக்கு நீர் பாய்ச்சும் அண்ணன்...
குருவிக்கூட்டில் முட்டைகளை
எண்ணி பார்த்தும்
குட்டைகளில் தேங்கி நிற்கும்
மழை நீரில் தவழும்
தலைபிரட்டைகளை மீன் குஞ்சுகள்
என நினைத்தும்...
நீரோடையில் குளித்தும்
சாலையோர இலந்தை மரத்தடியில்
உதிர்த்திருக்கும் பழங்களை
எடுத்து தின்றும்.....
விடுமுறை நாட்களில்
மரக்கிளையில் கொடியினால்
ஊஞ்சல் கட்டி ஆடியதும்....
கூட்டான் சோறாக்கி
கூடி உண்டு மகிழ்ந்ததும்
இன்று குழந்தைகளிடம் கூறினால்
சுவரில் மாட
விழித்திருக்கும் நேரத்தில்
கனவிலும்
விழி உறங்கும் நேரத்தில்
நினைவிலும்
உன்னோடு நான்...
சிலருக்கு கனவே வாழ்க்கையாகிறது
சிலருக்கு வாழ்க்கையே கனவாகிறது
எனினும் காதல் வாழ்கிறது