விரல் பற்றி
தந்தையின் விரல் பற்றினேன்
பயம் என்னை பற்றிய போது
அன்னையின் விரல் பற்றினேன்
அடுத்த அடி தடுமாறிய போது...
உன் ஒரு விரல் மட்டும் நீட்ட..
ஏதோ ஓர் பிணைப்பு
சொந்தமாய் நீ தெரியவில்லை...
பந்தமாய் உன்னை அறியவில்லை..
வருடங்கள் பல கடந்த போதும்
மனது மட்டும் பத்தை தாண்டவில்லை..
கலக்கமின்றி தயக்கமின்றி சலனமின்றி பாரதியின் கவிதையாய் கால்கள்...
பற்றி கொண்டது என் நண்பனின் விரல் அல்லவா...