வெங்கடாச்சலம் 18032024
வெங்கடாச்சலம்...
இவனது மூளை எப்போதும்
கனன்று கொண்டிருக்கும்
அதில் சிந்தனைச் சமையல்
நடந்து கொண்டிருக்கும்...
பசியாறப் பரிமாறுவதில்
மாற்று சுவை உள்ளோரும்
ருசி காண்பர்.. பசி தீர்வர்...
படைத்த இறைவனைத்
தேடாமல் அவன்
படைப்புகளைத் தேடும்
தேடல் இவனை இயக்கும்..
எதனை எண்ணி மனிதனைப்
படைத்தானோ இறைவன்
அதனை நோக்கி இவனது
பயணம் இருக்கும்...
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
அது இவனது முதல் பாகம்..
ஆகாயத்தின் மறுபக்கமும்
பார்க்க முயல்வது
இவனது இரண்டாம் பாகம்..
வானம் என்பது வசப்பட
என்பது புரிந்து தெரிந்து
வாழும் வெங்கட் உனக்கு என்
வசந்த வாழ்த்துகள்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்...
🪷🙏🌷😀🌹🌺👏