காதல்

காதலியின் பேரழகில் மயங்கிப்போய்
அவளையே சுற்றி நான் வளைய வந்தேன்
அவளோ என்னையே பார்த்துக்கொண்டிருக்க
என்னை கிட்ட கிட்ட வந்து நெருங்க
என்னவென்று கேட்டுவிட்டேன் நான்
அதற்கவள், 'அன்பே, இன்று காதலர் தினம்
என்று உலகே கொண்டாட, நீ மட்டும் மறந்தாயோ?
என்றாள்....... நான்......அதற்கென்னவாம் .....என்றேன்
அத்தைக்கு அவள் பதில் ஏதும் கூறாது மௌனமானாள்
ஆனால் அவள் முகத்தில் ஒரு குறும்பு புன்னகை
மெல்ல மெல்ல தோன்ற, அவள் விரல்கள்
அவள் கன்னங்களை மெல்ல வருட -கண்களால்
என்னை நோக்கினாள் ஓர் அபிநேத்ரியைப்போல் ....
இப்போது அவள் மௌனமொழியும் புன்னகையும்
நேத்திரங்கள் பேசிய மொழியும் புரிந்தது எனக்கு
நான் அவளைக்கேட்டேன்...."உனக்கு சுட்டப்பழம்
வேண்டுமா, சுடாத பழமா என்றேன் ? .......
அதற்கவள்...."அன்பே, என்ன நக்கலா....?" எனக்கு
சுட்டதும் சுடாததும் இரண்டும் வேண்டுமென்றாள்
ஆம் நீ இடும் முத்தத்தில் என் கன்னங்களுக்கு
அதிகாலை சூரியனின் வெதுப்பும், பௌர்ணமை நிலவின்
குளிரும் வேண்டுமென்றாள்.... கொஞ்சமும் நாணாது
அசர்ந்தேன் நான்...... அவளையே பார்த்து.... அதற்கவள்
" என்ன தயக்கம் என்னவனே, இது உனக்கு நான்
அளிக்கும் ஒரு நாள் சலுகை....இன்றைக்கே இது செல்லும்
என்றாள், நாணாது, கோணாது, குறும்பு சிரிப்போடு..

இன்று காதலர் தினம் உலகெல்லாம்
சற்றே களித்திடுவோமே நாமும்
உலகோடு சேர்ந்து என்றாளே .......
இவளா இது, என் அத்தைமகள் ரத்தினமா
இவள்....... நான் காண்பது கனவா நெனவா....
தம்பித்து நின்றேன்...!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Feb-19, 11:26 am)
Tanglish : kaadhal
பார்வை : 74

மேலே