உயிரோடு உயிராய்

உன்னுடன் கரம் கோர்த்து நடக்கின்ற
பொழுதெல்லாம்
பகல்பொழுதாய் இருந்துவிடக் கூடாதோ/
அடுத்தவர் கண்கள் நம்மை ஏக்கத்துடன் பார்க்க
நாம் எதேச்சையாய் ஒயிலாக வீதியில்
நடந்து செல்ல ஆசை,.... ஆனால்
அடுத்தவர் கண்பட்டு விட்டால் நமக்குள்
ஏதாவது,,,,, சீ சீ அப்படியொன்றும் நடக்காது

உலகமே காதலில் தான் இயங்குகிறது
இதற்குள் நாம் ஒன்றும் புதிதல்ல ,
உன்னை என் இதயத்தில் இணைத்தபின்
சிந்திக்க நாம் இருவரல்ல ஒருவரே,
காதல் ஒரு சாம்ராஜ்யம்
இதயங்களால் இணைத்துக் கட்டிய கோட்டை
சாதாரணமாய் நினைத்துவிட அது
வெறும் கல்லும் மண்ணுமல்ல ,,
உயிரோடு உயிராய் மகா உன்னதமாய்
உயர்ந்து நிற்கும் காதல் காவியம்.
உண்மைக் காதல் அழிவதில்லை
நூற்றாண்டு சென்றாலும் சான்று சொல்லும் .

எழுதியவர் : பாத்திமாமலர் (15-Feb-19, 11:19 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : uyirodu uyiraay
பார்வை : 253

மேலே