உன் காதோரம் பேசும்

உன் காதோரம் பேசும்
ஜிமிக்கி கம்மல்
நானாக வேண்டும்..
அதில் ஊஞ்சலாடி
உனைத் தீண்டி
நான் மயங்க வேண்டும்...
விண்ணில் தோன்றும்
வெண்ணிலவை
உன்னில் காண வேண்டும்..
நின் கண்கள் தாள
நாணுவதை
கண்டு ரசிக்க வேண்டும்..

இப்படியெல்லாம் நான்
படும் அவஸ்தை உனக்கும்
ஒரு கணம் வர வேண்டும்...

எழுதியவர் : ஜெய் ரெட்டி (15-Feb-19, 11:13 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
Tanglish : un kaathoram pesum
பார்வை : 429

மேலே