நேசம்
தடுக்கி விழுந்தவனுக்கு
பதறி கை கொடுக்கும்
நேசம்
உதைபடும் உடன்பிறப்பின்
அலறலுக்கு
உடன் பிறந்த உடன்பிறப்பு
அழும்
நேசம்
காதல் பருவத்தில் கால
நேரம் பாரது
காணவேண்டி கால்கடுக்க
காத்திருக்கும்
நேசம்
பிரசவ அறைக்குள்ளே
வலியால் கதற
வலிஇன்றி கண்ணீரோடு
வெளியே நிற்கும்
நேசம்
நேசமே சுவசமாய் மனிதம்
வாழ கற்றுத் தந்தாலும்
நேசம் மறந்து சிலது
சுயநலமாய்..,
(44 பேர் கொல்லப்பட்டதும்
பலர் காயம் அடைந்ததும்)
ஆழ்ந்த இரங்கலோடு இப்பதிவு