இந்திய வீரத்தாயின் வயிற்றில்

ஓ வைரங்களே அந்நியரின் வஞ்சகத்தில்
வதைபட்டு வானுலகம் சென்றீரோ
உங்களை நம்பி இங்கு நாங்கள் 130 கோடி பேர்
உள் இதயம் சிதைந்த உடலாக,
ஊனும் உயிரும் அணு உலையாய் மாறி
அதீத ஆற்றலுடன் எதிரிகளை வீழ்த்தும்
ஏவுகணையாய் மாறி எட்டுத்திக்கும்
வெற்றி கண்டு கொட்டும் முரசோடு
எம் குலக்கொழுந்தான உங்களை
இந்திய வீரத்தாயின் வயிற்றில்
விதையாய் இட வீரச்சூளுரை ஏற்கிறோம்.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (15-Feb-19, 6:50 pm)
பார்வை : 1817

மேலே