படைவீரர்கள்

தினம் தினம்
காவல்
காத்திருந்தோம்

தீவிரவாதிகள் எனும்
மூடர் கூடம்
தீண்டாமல் காத்திருந்தோம்

எல்லைவரை
நிலைத்திருந்தோம்
அரணாக

குடும்பம் துறந்து
மகன், மகள்
நினைவுகளை
நெஞ்சில் சுமந்தோம்

தேசமே பெரிதென
தோய்வின்றி
சுழன்றிட்டோம்

நீசன் அவன்
நீச செயலாலே
நீங்கா நினைவுகளில்
மட்டும் நாங்கள்

ஒரு வயதுக் குழந்தையும்
ஓயாமல் தேடிடுமே
அப்பா எப்போது வருவாரென்று

பதின்மவயது மகனும் மகளும்
பரிதவித்து போயிடுவரே
அப்பா எங்கேயென்று

புது தாலி
புனைந்த அவளும்
புதைத்திடுவாளோ
கனவுகளை

உலகம் தெரியா
துணை அவளும்
துணிந்துதான் நின்றிடுவாளா

மணக்கோலம் காண
மணப்பெண் தேடிய
பெற்றோரும்
பேதலிக்காமல் இருந்திடுவாரோ

தீவிரவாதம்
என்றுரைத்து
தீங்குதனை விதைத்த
மூடர்களே

கேள்விகளுடனே
நினைவு தப்பிய எங்களின்
கேள்விகளுக்கு பதில் தான் ஏதோ...?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (15-Feb-19, 12:52 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 979
மேலே