போன்சாய்
ஆனது 400 வருடங்கள் ஆனால்
விருட்சமாய் வளர்ச்சியில்லை - என்றாலும்
நான் நாட்டிற்கே சிறந்த மரம்
கூடுகள் கட்டுவதற்கு என்னில் இடமில்லை
நானே கூண்டுக்குள் குருவியாய்
என் வலி யாருக்கும் புரிவதில்லை
ஒரு குளத்து நீர் முழுவதும் குடிப்பவன் நான் - இன்று
ஒரு குவளை நீர் மட்டுமே ஆகரமாய்
என்னில் எவற்றின் எச்சமும் இல்லை
இதுவே என் வாழ்க்கையில் பெரும் அச்சம்
நான் நன்றாக இருந்திருந்தால்
கிளையே திருட்டிற்காகிருக்கும்
நலிவடைந்ததால் நானே திருட்டிற்குட்பட்டுள்ளேன்.
- நன்னாடன்