காதல்

மூடி திறக்கிறது உந்தன்
காந்த கயல் விழிகள்
ஓர் அலைபோல் என்
இதயத்தில் மோதி
என் இதயத்தைப்பறித்து
உன் இதயத்தில் வைத்து
பின் மீண்டுமொரு அலையாய்
என் இதயத்தை தொட்டு ஆர்ப்பரித்தது
காதல் அலையாய் இதோ என் இதயம்
இது இன்று முதல் உனக்கே என்று பாடி
எங்கே என் இதயம் தந்துவிடு என்றேன்
அது என்னிடம் தஞ்சம் தஞ்சம் என்
இதயம் உன்னிடம் என்றாளே அவள்
காதலுக்கு காதல் பதிலாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Feb-19, 5:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 63

மேலே