aasiriyar

அன்பை பண்பை அறிவை போதித்தவர்
ஆன்மிகம் அறிவியல் அனைத்தும் கற்பித்தவர்
இளமை பருவத் தவறை திருத்தியவர்
ஈசனுக்கு அடுத்த இடத்தை பிடித்தவர்
உண்மையே என்றும் பேச செய்தவர்
ஊரார் அனைவரும் போற்ற வாழ வைத்தவர்
என்றும் எங்கள் நெஞ்சில் தங்கி விட்டவர்
ஏணியாய் இருந்து எங்களை ஏற்றி விட்டவர்
ஐயம் பலவும் தீர்த்து விட்டவர்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றவர்
ஓடமாய் இருந்து எங்களை கரை சேர்த்தவர்
ஒளவை வழி நடக்க செய்தவர்
அவரே எங்கள் ஆசிரியர்
அமரரான செய்து கேட்டு
அடைந்த துயரம் தீர இறைவா நீ தான் வழி காட்டு!

எழுதியவர் : வைரமணி (31-Aug-11, 6:52 am)
பார்வை : 23027

மேலே