என்னவள்

மின்மினிப்பூச்சிகள் வடம் இழுத்துச் செல்லும் கற்பனை தேர்
அவளது கனவு உலகின் அத்தனை தெருக்களுக்கும் பரிச்சயமே

ஏதோ ஒன்றை ஆதியாய் பற்றி தொடரும் அவளது கதைகள்
அந்தமின்றி தொலைந்து போகின்றன அவளது உறக்கதினுள்

என்றுமே வசந்தம் வீசி களைத்திருக்கும் அவளது கதை காடுகள்
அதில் களைப்பின்றி சுற்றி வருவாள் ராஜகுமாரியாய்

தினமும் நேரம் தள்ளியே வரும் எனது உறக்கம்
தவறுகளோடு அவள் பேசும் மழலைக்காக

ரசிக்கத் தூண்டும் அவளது சின்ன கோபங்கள்
என் பொய்யான அழுகையில் கறைந்து விடுகின்றன

பௌர்ணமி அன்று மட்டுமே ஜொலிக்கும் நிலவிற்கு பொறாமை
தினமும் ஜொலித்திடும் என் மகள் என்னும் நிலவின் மேல்

எழுதியவர் : மிதிலா (30-Aug-11, 1:38 pm)
சேர்த்தது : Mithi
Tanglish : ennaval
பார்வை : 991

மேலே