புதியவன்
இசையை மட்டும் ரசித்த என்னை
வரிகளையும் ரசிக்க வைத்தாய்
சேவலாய் குறுநேரம் கூவிய என்னை
குயிலாய் நெடுநேரம் பேச வைத்தாய்
குழுவோடு குலுங்கி சிரித்த என்னை
தனிமையை ரசித்து நிற்க்க வைத்தாய்
கண் முன்னே தோன்றும் யாவும் நீயானாய்
என் மனதில் என்றும் உதிரா பூவானாய்
உதிர்ந்து விடாதே...
உலர்ந்து விடுவேன்....