நட்பின் வாசம்

நான் எழுதும் மடல் முதல் முதலாய்
என் தோழிக்கு ....
கல்லூரியில் படிக்கும் போது நம் மனதில்
எழில் நிறைந்த கனவுகள் ,
மனம் நிறைந்த மகிழ்ச்சிகள் ,
நாம் எதை எடுத்துச் சொல்ல,எடுத்துச் செல்ல
என்றும் நாம் நினைப்பதுண்டு
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அழியாத
ஆனந்தங்கள் அவை .
இன்னும் இன்னும் வேண்டும் பாடங்கள் நட்பினிலே
படிக்கும் போது வந்த நட்பு
நாம் பிரியும்போது பிரியவில்லையே /
பசுமரத்தாணி போல் பட்டுபோன்ற இதயத்தில்
பதிந்து விட்டதடி
நட்பின் அடையாளம் பிரிக்க முடியாதபடி ..

அன்பின் தோழி நீ ,ஆதரவின் தேவதை நீ ,
நீ என்னைக் கட்டியணைக்கும் நேரத்தில்
நான் உன் குழந்தையாய் அந்நிமிடம் உன்னிடத்தில் ,
,இப்போதும் உன் அன்பை நினைத்து ஏங்குகிறேன்,
சிலசமயம் என் கண்களில்
கண்ணீர் தாரையாய் வழிந்தோடும் .
அது உண்மையில்
உன் அன்பில் வழிந்திடும் ஆனந்தக் கண்ணீர் .
தோழி என்றால் நீயும் என் தாயடி.....
உலகில் எத்துணை அன்பிருந்தும்
நட்பு எனும் அன்பில் வரும் பாசம் அது நம் சுவாசமடி
நட்பிற்கு ஈடு இணை உண்டோ/
நீ எங்கிருந்தாலும், நான் எங்கிருந்தாலும்
நட்பை மறக்கவோ , மறைக்கவோ இயலாதவாறு
வளருகின்ற நேசம் அது, வாழ்த்துகின்ற பாசம் அது ,
என்றும் குறையாத தூயதோர் அன்பின் வாசம் அது,
அதுவே நட்பு எனும் உலகறிந்த தேசம்.

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Feb-19, 12:41 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : natpin vaasam
பார்வை : 1974

மேலே