என் தோழனுக்காக
என்னிடம் நீ பேசுகையில்,
ஒரே இடத்தில் நிற்காத உன் விழிகள் அழகு!!!
நீயாகவே பேசி மாட்டிக்கொள்ளும் உன் மொழிகள் அழகு!!!
அங்கேயே சுற்றிச்சுற்றி விளையாடும் உன் கால்கள் அழகு!!!
உன் தோழனையே எதிர்பார்த்து கொண்டிருக்கும் உன் எதிர்பார்ப்புகள் அழகு!!!
இதற்கு நடுவில்,
உன் குறும்பு சேட்டைகளும்,
உன் முக பாவனைகளும்,
உன்னுடைய வெட்கமும் அத்துணை அழகு!!!

