விடுதலை பெண்மணிகள் !
விடுதலைப் பெண்களில்
நம் வேலுநாச்சியார்
சிவகங்கை சீமாட்டியாய்
கணவனை கொன்ற
கயவர்களை வீழ்க்க
அரியணைஏறி ஆயுதம் ஏந்திய
வீர பெண்ணாய் ஆங்கிலேயரை
கொன்று வென்றாள்
அது மட்டுமே ......!
அஞ்சா நெஞ்சமும்
அகிம்சை மொழியும்
கலந்த கருவில்
பிள்ளை பேர் பெற்றபின்னும்
வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தில் சொத்தை
விற்றும் தன் பெற்ற பிள்ளையும்
கணிக்கையாக்கினால் சிறையில்
பூத்த அஞ்சலையம்மாள்....!
சீரும் சிறப்பும் கொண்ட
அம்புஜத்தம்மாள் .....
பல மொழி பயின்றும்
பகட்டு காட்டாமல்
பெண்ணடிமை குரளுக்கு
பேர் சொல்லும் பெண்ணாய்
சிறைப்பட்ட வாழ்க்கையை
உயிர் தொட்ட தமிழுக்காக
சுதந்திர தாயானாள் அதில்
சுட்ட வலிகளை
நன் கண்ட பாரதம் என்ற
நூலுக்கு விருதும் பெற்றார்
தமிழ் புகழும் பெற்றார்....!
பெண்ணே ......
உனது பிறப்பு புனிதமானாலும்
உனது இறப்பு புன்னியமாகட்டும்.