மனித குரல் !
தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்
தேடும் அன்பில் வேற்றுமையின்றி -நம்
தேசம் ஒன்றே குலவிடுவோம் ....!
தீதும் நன்றும் பிறர்தர வார இதை
தெரிந்தும் இனியும் திருந்திடுவோம் ....!
நாடும் மண்ணும் நமதென எண்ணி
நாளும் பொழுதும் வாழ்ந்திடுவோம் .....!
காந்தி தேடி தந்த சுதந்திரத்தை
நாம் பாடி பாடி பேற்றிடுவோம் ....!
சாதிமத பேதமில்ல சமதான வாழ்வை
எண்ணியே சந்தோசமாக வாழ்ந்திடுவோம்....!