© ம. ரமேஷ் சீர்க்கூ கவிதைகள்
சீர்க்கூ கவிதைகள்:
காலந் தோறும் அடி வரையறையைக் கொண்டு தமிழ் இலக்கியங்களை வகைமை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சீர்க் கவிதைகள் ஒரே ஒரு அடியில் முடிந்துவிடுவதால் அடிக் கவிதை எனப் பெயர் சூட்டாமல் ஒன்றிரண்டு சீர்களில் கவிதை முடிந்துவிடுவதால் சீர்க்கூ எனப் பெயர் சூட்டியுள்ளேன். ஒன்றிரண்டு சீர்களில் கவிதை இயற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல. வடிவத்திற்கேற்ப உள்ளடக்கத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்தக் கவிஞனின் கடமையாகிறது. கவிதையின் வடிவ சுருக்கத்தால் இருண்மை / கூடார்த்தம் ஒரு உத்தியாகி விட்டது. கவிதையின் தலைப்புக்கேற்பவே உள்ளடக்கத்தின் பொருளை வாசகர்கள் விரித்துரைத்துக் கொண்டால் இருண்மையைத் தவிர்க்க முடியும். கால வேகத்துக்கு இந்த வடிவத்தை நவீனக் கவிதை உலகம் வரவேற்கும் என நம்புகிறேன்.
- ம. ரமேஷ்
•விபச்சாரம்
தினமொரு கற்பு
•கல்வி
முதலீடு
•பூக்கள்
இறைவனின் அழகு
•மழை
பூமிக்கான ஒப்பாரி
•இலவசங்கள்
அரசியல்வாதிக்கு லாபம்
•சாதி
அரசியல் சூட்சமம்