காவிதைப் பேட்டி

இவரிக் கூட்டின் அடைபடும் உரைநடை
பிரித்ததைக் கூறினால் பிடிபடும் கவிதை
உரைநடைப் புதுமையாய் அடைபடும் கவிதையில்
உலகுக்குச் சுகமேது பராபரமே.

சந்தமும் சாந்தமும் சித்தமும் இல்லா
பித்தமாய் நித்தமாய் கூடினால் சொல்லா?
சுத்தமாய் சுகந்தமாய் கூவியான எல்லாச்
சத்தமும் சொல்வனம் பிரசுரிக்கலாமோ?

கவியொருவன் தைக்கின்ற திருவோடு சொற்கூடு
மெய்ப்பாதி பொய்மீதி மெருகோடு வெளிப்பாடு
பேரண்டமாய் ஓரணுவாய் உருவோடு வரும்போது
அதுவென்ன கவிதையன்றி கட்டுரையோ..?

எழுதியவர் : ஹரீஷ்.நெ (2-Sep-11, 5:50 pm)
சேர்த்தது : Hareeshmaran
பார்வை : 601

மேலே