களிமண் பொம்மையாய் ....!
நீண்ட மயிர்கள் மாண்டுவிடும்
சில நொடியில்
மீண்டும் தளிர்க்க .....!
ஆனால்.......
தளிரா தலைகள்
மாண்ட மண்ணில்
மீண்டும் பிறப்பதில்லை .....!
இதோ .....
சுதந்திர மரணம் கண்டவர்கள்
சுற்று சுழல்களை அலங்கரிக்கும்
மணி மண்டப காட்சி பொருளாய்
காலம் கடக்கிறார்கள் .....!
ஆனால் அவர்கள்
கனவுகள் நினைவாக வில்லை
இன்னும் நிழலாய் மறைந்து
நிற்கிறது களிமண் பொம்மையாய் ....!