அடக்க முடையார் அறிவிலரென்று எண்ண வேண்டாம் - மூதுரை 16

நேரிசை வெண்பா

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு. 16 – மூதுரை

பொருளுரை:

நீர் மடையிலிருந்து ஓடுகிற சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருக்க இரையாவதற்கு ஏற்ற பெரிய மீன் வரும் வரையில் கொக்கானது வருத்தமுடன் அடங்கியிருக்கும். அதுபோல, தக்க பகைவர் வரும் வரையும் அடங்கியிருப்பவரை அறிவு இல்லாதவரென்று கருதி அவரை வெல்லுவதற்கு நினைக்கவும் வேண்டாம்.

கருத்து;

அடக்கமுடையவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடுவரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Feb-19, 2:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 798

மேலே