உற்றுழித் தீர்வார் உறவல்லர் - மூதுரை 17

நேரிசை வெண்பா

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு. 17 - மூதுரை

பொருளுரை:

நீர் வற்றிய குளத்திலிருந்து நீங்குகின்ற நீரில் வாழும் பறவைகள் போல, வறுமை வந்த பொழுது நீங்குபவர்கள் உறவினர் ஆக மாட்டார்கள்.

அந்தக் குளத்திலுள்ள கொட்டியும், ஆம்பலும் (அல்லி), நெய்தலும் போல நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்பவர்களே உறவினராவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Feb-19, 2:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 134

சிறந்த கட்டுரைகள்

மேலே