படைப்பு
விரல் இணைத்து
பேனா துணைகொண்டு
தேடாத வார்த்தைகள் தேடி...
வாழ்வியலை படைத்தான்...!
இதுவொரு படைப்பா....?
ஏளன கூக்குரலில்
ஓடி ஒளிந்து கொண்டான் அவன்...
ஏற்றமிகு எண்ணங்களை
ஏறெடுத்து பார்க்காமல்
கணநேர உணர்வுகளை
வாழ்வியல் மந்திரமாக்கி
மஞ்சள் பூசிட
ஆஹா...! ஒஹோ...!
எக்காள கூச்சலில்
சுயம் மறந்த அவன்
அதோ உச்சாணிக் கொம்பில்...