அல்லலோ துள்ளலோ
52 வயதில் தான் அரசு வேலை கிடைக்க
54 வயதிற்கு பின் திருமணம் முடிக்க
அல்லலோ துள்ளலோ ஆராயாமல் அன்றாடம் கழிய
அன்னையும் பிதாவும் நோயிலே உழல
அன்றாட அலுவல்கள் அதனதன் போக்கில் செல்ல
ஆசைப்பட்டதை வாங்கவே பணம் தேவைப்பட்டது
எனக்கு அகத்தடியாள் ஆனவள்
பெரும் அழற்சியுற்ற நிலையிலும் - அவளை
வழி நடத்த வேண்டிய நான் ஓய்வு நாடிய நிலையிலும்
ஒப்பந்த தொழிலாளர் போல்
உறவில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது வாழ்க்கை
படித்தல் என்பது பல நிலையை அறியவே
பருவம் என்பது பல நிலையை உணரவே
படிப்பினால் வேலை என்பது பன்முகத் திறமையால்
பருவத்தை உணராமல் கடப்பது பயம் கொண்ட தன்மையால்
பசிக்கு உணவைப் போல் பருவத்திற்கும் செய்யணும்
படிப்பு ஏற்ற வேலை என்ற நிலைதனை கொய்யணும்
மாக்கள் போல் வாழ்வு தனை மனதில் கொள்ளணும்
- நன்னாடன்