கவிதா நதிக்கரையினிலே

சங்க இலக்கியங்களிலிருந்து உலக இலக்கியங்களிலிருந்து
இனிய கவிதைகள் சிலவற்றை இப்பகுதியில் ரசிப்போம் .
முதலில் சங்கஇலக்கியம் கபிலரின் நற்றிணை யிலிருந்து
ஒரு பாடல் . இது நேரிசை ஆசிரியாப்பாவில் அமைந்தது.

காதலன் பற்றி தலைவி தோழியிடம் சொல்லும் அகப்பொருள் கவிதை :

நின்ற சொல்லர், நீடு தோறு இனியர்,
என்றும் என் தோள் பிரிபு அறியலரே,
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போலப்
புரைய மன்ற, புரையோர் கேண்மை, 5
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே.
------கபிலர்
பொருள் : சொன்ன சொல்லில் நிக்கும் உண்மைமையாளன்
எனக்கு நெடு நாளாக இனிமையானவன். என் மென் தோள் என்றும் பிரிதல்
அறியாதவன் .
தண்தாமரை மகரந்தத்தை உறிஞ்சி உயர் சந்தன மாமரத்தின் கிளையில்
தேனீக்கள் உருவாக்கிய சந்தன மணம் வீசும் கொம்பு நறுந் தேன் போன்றது
இந்த என் காதல் பெருந்தகையாளன் நட்பு .
நீரின்றி வாழாது இவ்வுலகம் . அது போல் இவனின்றி நானில்லை .
அப்பிரிவினால் என் நறு நுதல் அச்சத்தில் வெளிறிடுமே அச்சிறுமை
இவளுக்கு செய்யாலாகுமோ என்றெண்ணி அப்படி செய்வது அறியாதவன் .

என்னினிய தோள்என்று மேபிரியா உண்மையான்
நன்நட்பா ளன்சந் தனமரத்தேன் போன்றோன்
நறுநுதல் அஞ்சிவெளி றும்பிரிவால் என்று
சிறுமைசெய் தல்நினை யான் .
----கபிலரின் வரிகள் இன்னிசை வெண்பாவாக ...

எழுதியவர் : கபிலர் நற்றிணை (2-Mar-19, 6:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே