அவனும் அவளும்
நதியாய் அவளுடல் அதில் இந்து
மதியாய் அவள் முகம் வந்து
கடலாய் அவனுட லதில் தாமரையாய்
அவன் முகம் கண்டு நதியவள்
சங்கமிக்க இந்துமதி தாமரை முகத்தில்
சந்தனமாம் முத்தமிட்டு முகம் குளிர
அவன், கடலவன் அவள், நதியவள்
ஆலிங்கனத்தில் அமைதிக்கு கடலானான்
காதலன் காதல் கடலவன்.