தனிமையில் இன்பம் காண்பாய்
உன்னுடன் உனக்கு வாழ பிடிக்குமா ?
தேடிவரும் இன்பத்தை
தேடி ஓடும் நமக்கு ..
தானே இன்பமாய் மாற முடியுமா ?
உன்னை நீயே காதல் செய்
உன் அழகை ரசித்து கவிதை எழுது
இரவெல்லாம் உன்னுடன் நீயே பேசு
காதலில் வெற்றியை கண்டதுண்டா?
காண்பாய்
மனிதா
யார் யாரையோ ரசிக்கிறோம்
ரசித்துதான் பார்ப்போமே நமக்கு நாமே