சுயம்
இதோ தெரிகின்றது என் இதயம்
என்றோ புறக்கணிக்கப்பட்ட ஓலமாய்
வெற்றிடமாய் வேறு இடம் தேடி
விடைதேடும் கேள்வியாக நான்
தொலைந்து தொலைந்து தேடுகின்றேன்
தொலைத்த இடம் ஏதென்று
ஒரு முறை தொலைந்திருந்தால்
கிடைத்திருக்குமோ...
தேடுதல் தொலைதூரமாய்
தேட தேட வெகுதூரமாய்
தேடுகின்றேன் என் சுயம் ஏதென்று...