வட்டி

வட்டி
=====
வல்லிசை வண்ண எண்சீர் விருத்தம்
======================================
வட்டிப்பண மெட்டிப்பெற வித்திட்டவி திப்போ
வட்டிக்கடை கிட்டத்துனை எட்டிச்செல விட்டே
நட்டப்பட விட்டப்பழு திட்டத்தொடு சற்றே
நட்டுத்தரு மச்சச்செடி கட்குக்குழி துட்டே!
பட்டக்கிளை விட்டக்கொடி பற்றிப்பட ரற்கே
பட்டுத்தெளி தற்குப்பெரு வட்டித்தொகை பற்றே!
சுட்டுக்கொள கற்றுக்கொள வைத்துத்துய ருற்றே
சொட்டுத்துளி யுப்பைத்தின வைத்தச்சுவை கைப்பே!
=======================================
ஒட்டுத்துணி கட்டித்தெரு நிற்கச்செயு தற்கே
ஒட்டுப்பசை கெட்டித்தன வட்டிக்கடை வைத்தே
குட்டக்குனி தற்குத்தக வக்கற்றது கட்கே
குட்டித்தரு தற்குத்தக வட்டிப்பெறு தற்கே
கட்டுப்பண வித்துக்களை இட்டப்படி நட்டே
கொட்டுப்பண முத்துக்களை கட்டித்தழு வற்கே
சட்டப்படி சட்டத்தினை சட்டைப்பையி லிட்டே
சிட்டைப்படி வெற்றிப்பெரு மற்பத்தன முற்றே!
=============================================
சிக்கிக்கொள விட்டுப்பல விக்கட்டுழ லற்கே
சித்தத்தொடு யுத்தத்தினை விட்டுக்கெடு தற்கே
சொக்குப்பொடி யிட்டுத்தரு மெச்சத்தகு துட்டே
சொட்டைத்தலை பெற்றுத்தர வுச்சித்தலை கெட்டே
தக்கப்படி துக்கப்படு தற்குத்தெரி வித்தே
திக்திக்கென திக்கித்திண றற்குக்குறி வைக்கா
சக்திக்குள டக்கத்தகு சித்தத்தெளி வுற்றே
சற்றுத்திட முற்றுத்துணி வட்டிக்கடை விட்டே!
=============================================
**மெய்யன் நடராஜ்
=============================================

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Mar-19, 10:17 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 57

மேலே