பெண்ணே நீயின்றி
உலக மகளிர் தினம்.
பெண்ணே நீயின்றி......
-----------
ஆண்டவனின் அதிசய
சிருஷ்டி பெண்.
பிரபஞ்சத்தின் ஆக பெரிய பொக்கிஷம் பெண்.
அவதார புருஷர்களின் அன்னையும் பெண்.
மிக பெரிய ஆளுமைகளின் அம்மாவும் பெண்.
காவிரியும் பெண்.
அந்த கங்கையும் பெண்.
அடுப்பாங்கறையில் இருந்து ஆக்ஸ்போர்டு வரை பெண் .
கவிதைக்கு அழகு பெண்.
அந்த கதைக்கு முக்கியம் பெண்.
காவிய நாயகி பெண்.
சக்தியின் வடிவம் பெண்.
சரஸ்வதியும் பெண்.
லஷ்மியும் பெண்.
சாந்த சொரூபி பெண் .
சாகசம் பல செய்வதும் பெண் .
சமத்துவம் படைப்பதும் பெண்.
சகலமும் பெண்.
அகிலம் ஆள்வதும் பெண் .
ஆன்றோர் சான்றோர் போற்றுவதும் பெண்.
நீர் இன்றி உலகில்லை
பெண்ணே நீயின்றி நிச்சயம் உலகில்லை.
-பாலு.