காதல் - காதலன்ஆசை

என்னவளே,

உன் கண்களில் நான் கரைந்திட ஆசை;
என் கைகளில் உனை தாங்கிட ஆசை;

உன் மார்பிலே நான் மறைந்திட ஆசை;
என் நெஞ்சோடு உனை சுமந்திட ஆசை;

உன் மடியே எனக்கு தலையனையாய்,
உலகத்தையே மறந்திட ஆசை;

கையோடு கை சேர்த்து,
இதழோடு இதழ் குவித்து,
இறுக்கி அணைத்திட ஆசை!

எழுதியவர் : செந்தில் லோகு (11-Mar-19, 2:07 pm)
சேர்த்தது : செந்தில் லோகு
பார்வை : 187

மேலே