வருமைக் கோடு

வருமைக் கோடு

வறுமை
இந்த மையை
எந்த ஆட்சியாளர்களும்
பாரத மாதாவின்
கண்ணிலிருந்து
அழிக்கவில்லை

அவள் கண்ணிற்கு
அழகாய் உள்ளதென்று

வறுமைக்கோடு
இது
ருசிக்கும் பசிக்கும்
நடுவே உள்ள
எல்லைக் கோடு

இக்கோடு
ஏழைகள் வெளிவரமுடியாமல்
தவிக்கும் காடு

இது
காலம் தரையில்
வரையாது
ஏழை தலையில்
வரைந்த கோலம்

இந்தக் கோட்டைத்
தாண்டவே பலர்
நெஞ்சை கழற்றி
வைத்து விட்டு
பஞ்சை ஆடை என்று
அணிந்து ஓடுகின்றான்

மனத்தைக் குப்பையில்
வீசிவிட்டு
பணத்தை அடுத்தவன்
பையில் தேடுகிறான்

உணவின்றி
ஏழையின் வயிறு
சுருங்கி விழும்
கோடு
வறுமைக் கோடு

மழை வந்தால்
வீட்டுத் தரையை
தளம் காத்து நின்றால்
வறுமைக் கோட்டிற்கு
மேல் உள்ளவன்
என்று பொருள்

வீட்டுத் தரையில்
குளம் காத்து நின்றால்
வருமைக்கோட்டிற்கு
கீழ் உள்ளவன்
என்று பொருள்

இக்கோட்டை
திறமையால்
தாண்டுபவனை விட
கயமையால்
தாண்டுபவனே
எளிதில் தாண்டுகிறான்

பானை உறங்காது
அடுப்பில் பூனை
உறங்கினால்
அது வருமைக் கோடு

வறுமையிலும்
நேர்மை
அதுவே பெருமைக்கோடு

எழுதியவர் : புதுவை குமார் (11-Mar-19, 7:49 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 90

மேலே