நானாகிய நான்

நானாகிய உலகை நானாகிய நான் படைத்து,
நானாகிய என்னில் ஆணும், பெண்ணும் நானாகிய சகல உயிர்களிலும் தோற்றுவித்து,
நானாகிய பெண்ணும் நானாகிய ஆணும் நானாகிய காதல் நலமுற கலந்திட நானாகி நான் பிறந்து நானாகிய பூமி எங்கும் நானாகிய நானாகவே பறந்து விரிந்தேன் என்று அறியாயோ என் நெஞ்சே!?

நானாகிய நண்பனோடு நானாகிய நானே சினேகித்து,
நானாகிய சத்துருவினோடு நானாகிய நானே நானாகிய யுத்தம் செய்ய,
நானாகிய அனைத்தையும் நானாகிய நானே அழிக்க அந்த நானாகிய வலியை நானாகிய உலகெங்கும் நானாகிய நானே உணர்கிறேன் என்று அறிவாயோ என் நெஞ்சே!?

நானாகிய செங்குறுதியில் நானாகிய நானே மூழ்கி எழுந்திருக்கையில் நானாகிய என்னில் நானாகிய வலியை உணர்ந்து நானாகிய எனக்கு ஆறுதல் கூறிட நானின்றி யாருமில்லாமல் நானாகிய நானே நானாகிய எனக்கு நானாகிய அம்மாவும் நானாகிய அப்பாவும் ஆகி, நானாகிய சகோதரியாய் நானாகிய சகோதரனாய் நானே உருவாகி ஏற்ற பாத்திரத்திற்கு ஏற்ப மாயையில் சிக்கி நானாகிய நான் நானாகிய என்னை மறந்தே ஆடுகிறேன் என்று அறிவாயோ என் நெஞ்சே!?

நானாகிய என்னை நானாகிய நான் ஆட்டுவிப்பதில் நானாகிய நானே தோலைத்து நானாகிய நான் அதுவா? இதுவா? என்று நானாகிய என்னை நானே குழப்பி நானாகிய நானாகவாகவே தெளிந்துக் கொண்டிருக்கிறேன் என்று அறிவாயோ என் நெஞ்சே!?

( இவ்வரிகளில் நானாகிய நான் என்பது எல்லாம் வல்ல ஆதி மூலத்தைக் குறிக்கும். )

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Mar-19, 8:41 pm)
Tanglish : naanakiya naan
பார்வை : 1001

மேலே