தனிமை தேவையில்லை

பிஞ்சுக்கரங் கொண்டிழுத்து
‘விளையாட வா’ வென்று
கொஞ்சும் மழலையரும்,
அஞ்சுவிரல், உள்ளங்கை
அனைத்தும் உணவளாவி

‘ஆக்காட்டு, ஆ’ எனலும்,
கோடி கொடுத்தாலுங்
கிட்டாது இப்புவியில்,
மட்டற் றிவையிருக்கத்
தனிமைநீ தானெதற்கு?
‘எட்டிப்போ! இப்போதே! ‘
✍️ தமிழ்க்கிழவி.

எழுதியவர் : தமிழ்க்கிழவி (12-Mar-19, 3:48 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 3386

மேலே