Nudity என்கிற கெட்டவார்த்தையும், காமம் என்கிற புனிதமும்
Nudity என்கிற கெட்டவார்த்தையும், காமம் என்கிற புனிதமும்
இங்க நடந்துகிட்டிருக்கிற எதைப்பத்தியும்
இங்க உலாவும் பதிவுகளைப் பற்றியும்
பண்டு சரித்திரத்தில் நடந்ததை உரையாடுவதைப் பற்றியும் .. இங்கு சிலரால்
கொடுக்கப்படும் ஆலோசனைகளைப் பற்றியும் .. ஆடைக் கலாச்சாரங்களைப் பற்றியும்.. இவர்கள் இப்படி இருந்திருக்கலாம் .. இப்படி இருந்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது என்னும் ஒரு பாலினத்தினர் மீதான திணித்தல்களைப் பற்றியும் .. நேர்ந்துவிட்டவைகளைப் பற்றியும் நான் பேசி இருக்கும் நேரங்களை வீணாக்கப் போவது இல்லை .. கொஞ்சநாளில் மாறப்போகும் இந்த முகநூல் வாசிகளின் மனதின் காலநிலையைப் பற்றி ..Damn I don't care at any cost .... பிடிப்பட்ட நான்குப் பேரைத் தவிர .. டெக்னாலஜி வளர்ந்துவிட்ட கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தவைகளே உறக்கத்தைப் புரட்டிப் போடுகின்றன ..
இதுக்கிடையில .. வினாயகர் பால் குடிச்சாரு பனிலிங்கம் வளருது .. திருவண்ணாமலைக் காடுகள் ல நிறைய கைகளிருக்கும் முனிகளைப் பார்த்தோம் .. சிரிப்பு வைத்தியம்
எதிலும் என் எண்ணங்கள் இலயிப்பதே இல்லை
.. தமிழ்நாடு அரசியல் நிலமை .. இந்திய அரசியல் நிலமை .. இந்தியப்பாடத் திட்டம்
இதர மானிலங்களின் பாடத்திட்டம் .. மதங்கள் சார்ந்த அவ நம்பிக்கை .. Die-able devotees of religion idiotics .. Clan Deities வாக்காடுகள் ..
மதனூல்கள் எல்லாமே .. வாழும் சமுதாயத்திற்கு எது வேண்டுமோ அதை போதிக்கிறதா என்றால் இல்லை
நிர்வாணத்தை கெட்டவார்த்தையாக்கி
காமத்தைப் புனிதமாக்கின பங்கு
இவைகளுக்கெல்லாம் அதிகமிருக்கிறது
எப்போதோ சொன்னதுபோல .. உயிர்த் தோன்றி மனிதன் தோன்றியபோது இல்லாத ஆடைக் கலாச்சாரத்தை உதிர்த்துப் பார்த்தோமானால் ... நாம் கடவுள்கள் என்றுச் சொல்லும் எல்லோருக்கும் அவரவர்களுடைய கதைகளில் .. ஆடை அணிவித்திருப்பது ஏன் ...
எத்தனை யோசித்தும் பதிலோ பொருளோ இருப்பதாகத் தெரியவில்லை
இந்தியக் கலாச்சாரத்தில் பிறந்து ..ICGSE பாடநூலில் படிக்கத் தொடங்கிய எங்களுக்கு
புரியும் வயதில் .. விளம்பத் துவங்கிய பாடம்
நிர்வாண விலங்குகளின் தேடல்களைப் பற்றியவை .. எந்த விலங்கும் விலங்கு சார்ந்த இனமும் .. நிர்வாணமாகித் திரியும் இதர தன் இனம் சார்ந்த விலங்குகளை வன்புணருவது இல்லை .. அது திரிந்து வேட்டையாடி .. தேவையைத் தீர்க்கின்றன .. அவைகளுக்கு காமமும் அப்படித்தான் .. அது வெறும் தேவைகளில் ஒன்றுதான் .. எதிலும் புனிதமில்லை கேங்க் ரேப் இல்லை நிர்பந்தம் இல்லை ... எழுதத் தெரிந்தவனின் இனத்தின் கபடங்களே அங்கு இல்லை ...
அன்று என்னுடன் படிக்கும் குழந்தைகளை சரிவரத் திட்டி வளர்க்க அன்னையும் பலருக்கு இல்லை நானுட்பட அன்னை இல்லாதவன் தான் .. அதே கல்ச்சரில் அக்கா படித்திருப்பதாலும் எனக்கான என் நண்பர்களுக்கான போதனை எளிதாகியது ...
நல்லது பிழையானது எல்லாம் எந்த அளவிற்குத் தேவையோ அந்த அளவிலேயே கையாண்டு வளர்ந்தோம் ..
பழைய அறங்களையே போதனையாக்கிக் கொள்ளாமல் .. திணிக்காமல் .. காலங்களுக்கேற்ப அவற்றின் மாற்றங்களுக்கேற்ப .. மக்களின் வாழ்க்கை முறைக்கேற்ப நாளாந்தமான விதிமுறைகளைத் தவிர்த்து புதிய அறம் வளர்த்து .. இதர மனிதர்களுக்கு தீங்கின்றி அவ்வறத்தை அறுத்து வாழும் பாடத்திட்டம் கொணர்தல் .. அரசுடைய .. சமூகத்தினுடைய தலைச் சார்ந்த கடமை ஆகும் ... இன்னும்
திருக்குறளில் சொன்னதையோ .. புராணத்தில் சொன்னதையோ வேதங்களில் சொன்னதையோ .. போட்டு மொக்கைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்காமல் புதிய அறத்தை பிறப்பித்து .. அவ்வறம் சீற்றம் பெறாமல் மிதமாய் இருக்க அரசு உதவுமோ இல்லையோத் தெரியவில்லை .. சமூகம் முன் வரவேண்டும் .. அன்றைய அதுபோன்ற அறம் அவை அன்றைய காலக் கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கேற்ப . வாழ்க்கை முறைக்கேற்ப இயற்றப் பட்டிருக்கும் .. அன்று அவமானம் வஞ்சம் ஆக்கிரமிப்பு கற்பழிப்பு இல்லையா என்று பலர்க் கேட்கலாம் .. இருந்திருக்கலாம்
ஆனால் அவைகளை உடனே படம் போட்டுக் கதைச் சொல்லும் எந்த டெக்னாலஜியும் இல்லை .. அதுபோல .. காலம் காலமாக கடவுள்களெனும் கற்களுக்கு தொண்டாற்றிய கடமையாற்றிய தேவர் அடியார்கள் (தேவதாசிகள்) என்னும் உயர்ந்த பெண்ணினம் வாழ்வாதாரம் இன்றி
தேவடியாட்கள் என பெயர்மாற்றப்பட்டு
அந்தப்புர பெண்களாக்கப் பட்ட ஈனங்கள்
நிறைய மறைந்தே போயின ..
இயல்புகள் .. யாருடனும் ஒட்டிப் பிறப்பதில்லை
பிறந்த இடம் ..வாழும் சூழல் ..வளர்ப்பு முறை இவற்றால் நாம் பழகத் தொடங்கும் நல்லவைக் கெட்டவைகளே இயல்பாக விஸ்வ ரூபம் எடுக்கும் .. அப்படி இருக்க நம் மனித சமூகத்தினருக்கு . எது நல்லவை எது கெட்டவை என்பதையே பிரித்துப் பாகுப்பாடின்றி பதப்படுத்தத் தெரியவில்லையே .. என்பது தான் பெரும் பரிதாபம் .. மாற்றாய் மத மூட அவ நம்பிக்கை .. புனிதமென மாற்றியத் தேவைகளை தீட்டு ஆக்குதல் .. வார்த்தைகளால் கொச்சைப் படுத்திய பெண்பால் உறுப்புகளை ஒளிந்திருந்து பார்த்து ஆர்கஸம் அடைதல்
என மூளையும் மனக் குழைவுகளும் சாக்கடைகளாகி .. ஓடும் போது ..
எல்லோரிடமும் ஒருதர ரேப்பிஸ்ட்டுகளும் ஒருதர சைக்கோக் களும் .. உருவெடுக்கத் தான் செய்கிறார்கள் .. இன்று நான்கு பேர்
சிக்கி விட்டார்கள்... சிக்காதவர்கள் இந்த க்ரூரங்களை தங்களுக்குள் உறங்கக் கிடத்தியவர்கள் அவ்வளவுதான் .. இனி எப்போது எழும்பும் அக்குரூரங்கள் என்று யூகிக்க முடியா நிலை .. இருக்கு ..
இந்நிலை மாற வேண்டும் ..
காமம் புனிதமில்லை .. நியூடிட்டீ கெட்ட வார்த்தை இல்லை .. டெக்னாலஜியின் ஆளுமை .. இன்றைய வளரும் சமூகத்திற்கு
இவற்றை ஆளுமை செய்யும் உத்தி ..
எது தேவை .. ஆண் பெண் இருவரும் சக உயிரிகள் தான் என்பதை உணர்த்த தேவையாய் இருப்பது என்ன .. மூட நம்பிக்கைகளால் மழுங்கி .. அகோரம் க்ரூரம் மறைத்து வாழும் .. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் க்ரூரங்களுடன் .. தோல் வாசனை .. பச்சை பால் வாசனை உணரா மனப் பித்துப் பிடித்துத் திரியும் வயது முற்றிய சைக்கோத் தனங்கள் வெளிவரும் முன்பு குழந்தைகளுக்கும் .. வயது முதிர்ந்தோருக்கும் அவசியப் படும் விழிப்புணர்வுகளை .. அரசு கண்டிப்பாக்கி
உதவுமா என்றால் .அதற்காகக் காத்திருந்தால் இனியும் நிறையக் கொடுமைகள் நடந்தேறி கோரமான நிலை உருவாகும் ..மனிதச்
சமூகம் முன் வரவேண்டும் .. பெற்றோர்கள் முன் வர வேண்டும் awareness camp க்ராமத்துக்கு க்ராமம் உருவாக வேண்டும்
அப்போவே சொல்லிக்கொடுத்திருக்கும் what are the significant things to do or don't என்னும் பாடத் திட்டம் .. அதை ஒரு விழிப்புணர்வாக
செய்ய .. இன்னொடி முதலே செயல்பட்டாலே
.. வருங்கால விபரீதங்களிலிருந்து .. பெண் மக்களையும் ஆண் மக்களையும் பாதுகாத்து மீட்டெடுக்க முடியும் ..
""ஞாயமானவற்றிற்கென .. ஞாயம் தேடி
மீடியாக்களிடமோ காவல் துறையிடமோ போக அஞ்சும் மோசமான மனநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை நம்மில் எத்தனைப்பேர்
ஒப்புக் கொள்கிறோம் .. நம்மை நம்மில் நாம் பாதுகாக்க எடுக்கும் முயற்சியிலும் சட்டத்தைக் கொண்டு திணித்து பணமாக்க எத்தனிக்கும் மீடியா அண்ட் காவல் துறை என்றாலே பயப்படுகிறோம்தான் ""அவர்களுடைய நான்கு நாட்களுக்கான வியாபாரம் நம் வாழ்க்கையை மாற்றிடுமா .. நிர்வாணம் ஒரு குறையில்லை என்பதை நாம் தான் பயில்விக்கவேண்டும்
என் பிள்ளைகளுடன் .. உறுப்புகளைப் பற்றிய உரையாடல் .. அவற்றைச் சார்ந்த Don't Do க்களைப் பற்றி கலவியின் தேவை அளவுகளைப் பற்றி .. அதற்கான வயது வரம்புகளைப் பற்றி ... டெக்னாலஜியின்
கையாள்தல் பற்றி .. சுய இன்பத்தின் (Mastrubation)மூலமான அழிவுகள் பற்றி .. அவர்களுடைய பள்ளியில் மெடிக்கலி பயலஜிக்கல் ஆதாரங்களுடன் .. நடத்திய விழிப்புணர்வுகளைப் பற்றி பேசுகிறேன் ..
எதையும் பெற்றொர்களிடம் ஷேர் செய்யும் உரிமையை குழந்தைகளிடம் வழங்கினாலே அவர்கள் நம்மிடம் அவற்றை ஒளிக்க மாட்டார்கள்.
அவர்கள் கலவியைப் பற்றீ அறிந்துகொள்வது தவரே இல்லை .. அதை உரையாட கிடைக்கும் சரியான இடமே.... அவற்றின் நன்மைத் தீமைகளை சரிவர உணர்த்த அவர்களுக்கு கிடைக்கும் ஸ்னேகிதமே .. அவர்களை நல்லவிதமாக உருவாக்கும் ... எதுவும் வேண்டாதவை என்று நாம் சொல்லும்போது .நமக்குத் தெரியாமல். அதை அறிந்துகொள்ள அவர்கள் ப்ராயத்தனப்படும் எல்லாமே .. எதுவுமே .. ஒருவகையான அழிவிற்கு அவர்களைத் தள்ளிவிடும் .. Lunacy n arrogancy
Let upstream more.. Pls aware/beware of it
So let us starts from us ...