வாழ்க்கையின் தத்துவம் தான் என்ன வாருங்கள் தெரிந்து கொள்வோம்
வாழ்க்கை ரொம்ப அதிசியம், சுவாரசியம் மிகுந்த ஒரு காந்தம் தான்.
அடுத்த நொடி ஒளிச்சு வைச்சு இருக்க அர்புதமும், ஆனந்தமும் எதுவும்
யாரலும் அறிய இயலாத ஒன்று தான். வாழ்க்கை பல வண்ணம் கொண்ட
வானவில் போன்றது அதை ரசிச்சு தான் வாழ வேண்டும்.
வாழ்க்கை வாழ்வதற்கு வீழ்வதற்கு அல்ல, வலிகள் நிறைந்த இந்த வாழ்க்கையில்
அனைவருக்கும் வாழ்வதற்கான வழியும் உண்டு. அதை காண காலம் தான்
கதை சொல்லும் கவலையில் கண்ணீர் கடலாகும். . காலங்கள் காயத்தை
மாற்றும் மாற்றமே நிலையானது இதை அறிந்தவர்கள் வாழ்க்கைய வாழ
கற்று கொள்கிறார்கள்.
வாழ்க்கையும் வானமும் ஒன்று தான் கண்ணிரும்,கஷ்டமும் போல பல நேரம் கதிரவனின் ஒளி வீசுகிறது. சில நேரத்தில்இடியும், மின்னல் போன்ற துன்பமும் வாழ்க்கையில் உள்ளது. எப்பவாதுவானில் வானவில் தோன்றுவது போன்று இன்பமும் வாழ்க்கையில்
உறவாடுகிறது.
வானம் ஒரு திறந்த நுலகம் தான் அதை படிக்கதெரிந்தவர்கள் இவ்வுலகில் குறைவு தான். வலிகள் நிறைந்த இந்தவாழ்க்கையில் வாழ்வதற்கு வானம் விடை சொல்லும் வீணாய் அனைவரையும் விமர்சிபதை விட்டு விண்வெளியில் விதைகள் நடுவோம். வாக்கைய வாழ்வோம் வானவில்லை வலைப்போம் வாழ்க வளமுடன் என்றும் வெற்றியுடன்.