எங்கே மனிதம்
எங்கே.....மனிதம்
மதிகெட்ட
மானுடனே
அண்டத்தை
அளந்த உந்தன்
அறிவை
அறைக்குள்ளே
தொலைத்தாயே....
விஞ்ஞானம் வென்று
எந்து பலன்
உந்தன்
மெஞ்ஞானம்
தோற்றல்லவா
போயிற்று....
காதலையும்
காமத்தையும்
பிரித்தறியும்
இளசுகளை
நண்பன் எனும்
நற்சொல் மூலம்
நரித்தனம் செய்யும்
நய வஞ்சகர்களே....
உயிரை உலுக்கும்
ஒலிநாடா
சொல்கிறது
அவளின்
விம்மலையும்
விழிநீரையும்....
அன்பை
ஆயுதமாக்கி
அழ வைக்கும்
ஆடவனே
அறமில்லா செயலை
ஆள்கூடி செய்யும் - நீ
ஆண் மகனா.....
கருப்போ
சிவப்போ
பெண்மையில் காணும்
கற்பை
ஆண்மையில்
காணாது போயது
யார்குற்றம்......
இறுதியில்
இரு கலாச்சார
யுத்தத்தில்
இங்கு
மரணிப்பது
மனிதமே.....
💔💔💔💔💔....... தயா..... ✍️