என் டைரி

கழிந்த நாளைக்கிழிக்க கிழிக்க
சுவரில் மாட்டிய காலண்டர்
தன ரூபத்தில் ஒல்லியாகிக்கொண்டே போக
வருடம் முடிய ஒன்னும் இல்லாமல் போகிறது
காலெண்டர் அட்டைமட்டும் மிஞ்ச
காலண்டரில் நாள் கழிய நாள்தாள் கிழிபடும்
காணாமல் போகும் , ஆனால் நான்
கழியும் நாள் ஒவ்வொன்றில் நடந்த விஷயங்கள்
அத்தனையும் என் 'டையரி ' இல் எழுதிவந்தேன்
அதில் பல கவிதை வடிவில் சில சில
சிறு குறிப்பு , மற்றும் சில ஒரு வரிக்கதையோ?
எப்படியோ வருடம் முடிய என் 'டைரி' இப்போது
என் கண்முன்னே, புரட்டிப்பார்க்கிறேன் அதன்
பக்கத்தை, அது ஒவ்வொரு கழிந்த நாளின்
சரித்திரம் பேசியது, கவிதையாய், கதையாய்
என் சிறு காவியமாய்க்கூட…….. இவை அனைத்தும்
உண்மை எழுத்துக்கள் அதனால் இவை
சரித்திர ஏடுகள் என்பேன் ….

சுவரில் மாட்டிய போன வருட காலெண்டர்
தன நாட்குறிப்புகள் கிழித்தெறியப்பட்டு
வெறும் அட்டையைத் தொங்கி கொண்டிருக்க
எப்போது குப்பையில் பொய் சேருமோ என்றிருக்க

என் வருட 'டைரி' அழியா சரித்திர தாளாய்
என் பெட்டிக்குள் போகிறது பத்திரமாய்
நாளை யாரவது பார்க்க பல கதை சொல்ல
சரித்திரம் வந்த கதையும் இதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Mar-19, 12:14 pm)
Tanglish : en dairy
பார்வை : 102

மேலே