மனசு
பச்சிளங் குழந்தையை
பாங்காய் கைலியேந்தி
பிச்சை கேட்டாள் பெண்ணொருத்தி,
பீடு நடை போட்ட நான்; அலட்சிய
புன்னகை சிந்தி,
பூச்சியை விட அவலமாய் இது
பெற்றதோ இல்லை விற்றதோ என
பேரழுக்கு மனதுடன்
பொல்லாத பார்வை உதிர்த்து பத்து ரூபாய்
போட்டிடவே பல முறை யோசிச்சேன்
போகும் வரை பின் வந்த
பைங்கிளியை "ச்சீ போம்மா" என்று கூறி
பேருந்தில் ஏறி அமந்தவேளை; அவள் கையிலிருந்த
பொற்சரமோ என்னை நோக்கி, கள்ளமில்லா
புன்னகையோடு "டாட்டா" என்றவுடன்
பாவி என் மனம் பட்டபாட்டை
பாடல் நூறு சொன்னாலும் வெளிப்படுமோ....!
இவண்
சங்கீதாதாமோதரன்