சகோதரிக்கு
சகோதரிக்கு...
சகோதரியே
உன்
மீது
கீறப்பட்ட
கீறல்களின்
வலியை
தேசம்
தன்மீது
கிழிக்கப்பட்ட
வலியாகவே
உணர்கிறது.
உனது
ஒடிந்த
குரலில்
ஒடிந்துப்
போனது
நூறுகோடி
இதயங்கள்.
உனது
அழுகையில்
கோயில்
மணியோசையும்
நின்று
போனது.
உன்னுடன்
நட்புகொண்டவர்கள்
உறவு
என்று
சொல்லிக்கொண்டவர்கள்
இழைத்த
இன்னல்களால்
நீ
வாழ்விழந்து
போனதாகக்
கருதாதே.
இக்
கொடுஞ்செயல்
புரிந்தவர்கள்
உருவிழந்து
நாணயமிழந்து
இதயமிழந்து
வெட்கமிழந்து
எல்லாவற்றையும்
இழந்து
மனிதர்கள்
என்ற
நிலையையும்
இழந்து
மண்ணாகிக்
கொண்டுள்ளனர்
என்பதை
அவர்தம்
பெற்றோர்கள்
மட்டும்
அறிந்த
உண்மை.
ஒன்று
மட்டும்
உறுதி.
இதனால்
எல்லாம்
வாழ்வு
பறிபோய்விட்டதே
என
எண்ணிவிடாதே.
உனக்கு
இதில்
துளியளவு கூட
பங்கும் இல்லை.
பங்கமும் இல்லை.
தான் போட்ட
கோலத்தை
தானே
அழித்துக்கொண்டதற்காக
சமூகம் தான்
பொறுப்பேற்க வேண்டுமே
அன்றி
நீ
அல்ல.
வாழ்க்கை
இத்தோடு
முடிந்துவிட்டது
என
எண்ணிவிடாதே.
எத்தனை
எத்தனை
யுகங்களாய்
கயவர்களிடமிருந்து
மீண்டு தான்
பெண்கள்
முன்னேறி
வரலாறு
படைத்து
இருக்கிறார்கள்
என்பது
வரலாறு.
நீ
தனி
மனிதள்
அல்ல.
மனித திரட்சியின்
சரிபாதி.
உனக்கு
ஏதேனும்
ஓர்
இழப்பென்றால்
கை தூக்கிவிட
ஆயிரம்
கைகள்
நீண்டுகொண்டுள்ளன
என்பதை
உறுதியாக
நம்பு.
சகோதரியே
கண்ணீரை
துடைப்பதற்கு
நூறுநூறு
தோழிகளுடன்
ஆயிரம்ஆயிரம்
தோழர்களும்
இருக்கிறார்கள்
என்பதை
மறந்துவிடாதே.
இனி
மதியால்
வெல்வதற்குப்
பழகு.
மிதிபடாமல்
மிதிப்பதற்கு
பயிற்சி செய்.
வலைதளங்களில்
வளைப்போருக்கு
எதிராக
வலைதளங்களையே
களமாக்கு.
இன்னமும்
இந்த
தேசத்தில்
காவல்நிலையங்களும்
நீதிமன்றங்களும்
உயிர்ப்போடு
தான்
உள்ளன
என்பதை
மறந்துவிடாதே.
இரவு
பகல்
என்தெல்லாம்
கதிரவனுக்குத் தான்.
சகோதரிகளுக்கு
அல்லவே
அல்ல.
- சாமி எழிலன்.