ஆத்தாவும் அய்யாவும் கிளம்பிட்டாக

ஆத்தாவும்
அய்யாவும்
கிளம்பிட்டாக.

அங்கன
யாரோ
மோடியாம்
ஒரு
ரண்டாயிரம் ரூவா
தாராங்களாம்.

இங்கன
ஈபிஎஸ்ஸோ
ஓபிஎஸ்ஸோ
எம் புள்ளைக்கு
இன்னொரு
ரண்டாயிரம்
ரூவா
தாராங்களாம்.

வாணாங்க
அய்யா
வாணாங்க
அய்யா
ரூவா
வாணாங்க
அய்யா.

ஆத்தாவும்
அய்யாவும்
கிளம்பிட்டாக.

சொத்துசுகம்
போனப்பக் கூட
யாரிட்டேயும்
கையேந்தலையே
சாமி.

எம்
புள்ளை
தெல்லியிலே
நாகணக்கா
காத்திருந்தானே
எங்கிட்டு
போயிருந்தீங்க
சாமி.

வயலெல்லாம்
காஞ்சிப்
போச்சுது.
கஞ்சிக்கும்
வக்கத்துப்
போனோம்.
கோவணம்
நனைக்கக்கூட
தண்ணிதாவா
இல்லாமப்
போச்சே.

நிண்ண
சொச்ச
சோளத்தை
விக்கப் போனாக்க
வேபாரிங்க
விரட்டிட்டாங்க
சாமி.

ஆத்தாவும்
அய்யாவும்
கிளம்பிட்டாக.

வாங்கன
கடன
வசூலிக்க
அதிகாரிங்க
வந்துவந்து
போறாங்க.
என்னன்னு
தாக்கு
சொல்றது?

மானம்
உள்றவங்க
சாமி.
உளவன்
ஏச்சுப் பிழைக்கவும்
மாட்டான்.
ஏமாத்தவும்
மாட்டான்றதை
நம்பமாட்டேன்றாங்களே
சாமி.

வயசுக்கு
வந்த
பேத்தியை
வுட்டுட்டு
பொறப்பட்டுட்டோம்
சாமி.

வகுத்துக்கு
கஞ்சி
கெடைச்சா
போதும்.
கைகால வச்சு
பொளச்சுகிறோம்
சாமி.

ஆத்தாவும்
அய்யாவும்
கிளம்பிட்டாக.

- சாமி எழிலன்.

எழுதியவர் : சாமி எழிலன் (12-Mar-19, 11:10 am)
சேர்த்தது : Saami Ezhilan
பார்வை : 37

மேலே