பொள்ளாச்சி
காதலன் எனும்
போர்வையில்
வந்த கயவனை,
நட்பெனும்
நாடகம் பூண்ட
நயவஞ்சகனை,
"ஆண் "
என்று கூறி
சொல்லின் பொருளை
கேட்கும்
விலங்குகளிடம்
விளக்கம் தர
இயலாமல்
விழி பிதுங்கி
நிற்கின்றேன்
ஆறறிவு கொண்டிட்ட
மேன்மை தாங்கிய
மனிதனாகிய
நான் !