என் நினைவு திருடா

என் கண்கள் உன்னை தேடுகிற தகவலை
உன் இதயம் கொடுக்கவில்லையா ?
என் நினைவுகளை தொலைத்து
உன் நினைவிலே வாழும் என்னை
காண உன் கண்கள் ஏங்கவில்லையா ?
பலரும் என்னை சுற்றியிருக்க ,
பல குரல்கள் காதோரம் வருகை தர ,
பல முகங்கள் பார்த்து செல்ல ,
என் மனம் மட்டும் ஏனோ
உன்னையே தேடி வருகிறது ....
உன் முகம் என் உள்ளத்தில்
உருவமானது என்றென்றும் ...
என் உயிருள்ளவரை அழியாத ஓவியமானது ...
கொஞ்சம் வண்ணம் தீட்டிட
காதலுடன் வருகை கொடுடா
என் நினைவு திருடா ....