சொல்லப் பதறுதடா நெஞ்சம்

சொல்லப் பதறுதடா நெஞ்சம்
பெண்மைக்கு மட்டும் ஏன் இந்த வஞ்சம்?

அச்சம்மடம் நாணம் இனி வேண்டாம் பெண்ணே
அச்சமின்றி வாழ தற்காப்புக்கலை கற்றிடு.... உனை
எச்சிலிட துடிக்கும் கொடூர மிருகங்களை
பச்சாதாபமின்றி பலம் கொண்டு தாக்கிடு
நச்சுப் பதர்களை சட்டத்தின் முன் நிறுத்திடு !

அரசே ! குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைதுசெய்....
மிச்சம் பதுங்கியுள்ள கோரமுகங்கள் பதறி மிரண்டிட
அதிகபட்ச தண்டனையாய் ஆணுறுப்பை அறுத்திடு....
அச்சமின்றி பெண்கள் வாழவழி செய்திடு...

பெற்றோர்களே! ஆண்பிள்ளைகளை மனிதநேயத்துடன் வளர்த்திடுங்கள்
பெண்பிள்ளைகளை தன்னைக் காத்திடும் திறனோடு வளர்த்திடுங்கள்....!

எழுதியவர் : வை.அமுதா (19-Mar-19, 10:19 am)
பார்வை : 79

சிறந்த கவிதைகள்

மேலே