காதல்

நிலவிற்க்கே தனி அழகு
நிலவின் கலை என்பர்
நிலவின் முகத்திற்கு
அது தருமே ஓர் தனி களை
பெண்ணே என் மனதில்
உலாவி வரும் வெண்ணிலவே
உன் முகத்திலும் அந்த
வான் நிலவின் கலை கொஞ்சம்
காண்கின்றேன் நான் உன்
அழகு முகத்தின் களையாய்
என் மனத்தைக் குளிர வைக்கும்
பெண்ணிலா நீ என்றும் நீயே
என் மனதில் பௌர்ணமி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Mar-19, 3:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 231

மேலே