காமனே நீ செல்---கலித்தாழிசை---

களை எடு :

#கலிவிருத்தம் :

நெல்லைப் பார்த்திடும் நெற்றியின் பொன்றுளி
புல்லின் வேர்நிலம் பூப்பதாய்க் காதலில்
கல்ம னத்திடை காமமும் தோன்றவப்
புல்லென் றேயிதைப் போக்குதல் நன்மையே...

*************

காமனே நீ செல் :

#கலித்தாழிசை :

நெஞ்சுக்குள் பூப்பது நீயென்று நானறிவேன்
பஞ்சுக்குள் தீயாய்ப் படர்காலம் நானழிவேன்
கஞ்சிக்காய் ஏங்குகன்றாய்க் காதலுக்கு நான்றவிக்க
மஞ்சுக்குள் நீந்துகின்ற வான்மதி பாற்றருமோ?...
மன்மதனே நீசென்றால் வானிலவும் பாற்றருமோ?...


...இதயம் விஜய்...

எழுதியவர் : இதயம் விஜய் (22-Mar-19, 6:38 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 5510

மேலே